நாடு முழுவதும் வரும் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்க உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் கூறியுள்ளார்.
இந்தியாவில் விமான சேவை முடக்கத்தான் விமான நிறுவனங்களின் வருவாய் 44% வரை சரிவடைந்துள்ளது இதனால் அடுத்த நிதியாண்டில் விமான நிறுவனங்களின் மொத்த கடன் 46,500 கோடியாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் வரும் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்க உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். படிப்படியாக விமான சேவை தொடங்கப்படும்.
விமான கட்ட நிர்ணயம் மற்றும் எந்த நகரங்களுக்கு விமானம் இயக்குவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். மேலும் விமான கட்டணங்களை தற்காலிகமாக குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கட்டணமாக நிர்ணயிக்க முடிவு செய்துள்ளதாகவும், முதற்கட்டமாக மூன்றில் ஒரு பங்கு விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார். பயணிகள் தெரிவிக்கும் சுய தகவல் அல்லது ஆரோக்கிய சேது செயலி தரவு அடிப்படையில் பயண அனுமதி வழங்கப்படும் என கூறிய அவர்,
ஆரோக்கிய சேது செயலியின் நிலை சிவப்பு நிறமாக இருந்தால் பயணம் செய்ய அனுமதி இல்லை என குறிப்பிட்டுள்ளார். விமான கட்டணம் பயண கால அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும். விமானங்களில் நடு இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும், தனிமனித இடைவெளியை பின்பற்றி விமானங்களை இயக்கினால் 33% வரை விமான கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தகவல் அளித்துள்ளார்.