Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : நாளை முதல் உள்நாட்டு விமான சேவைகள் முடக்கம் …!!

நாடு முழுவதும் உள்ள உள்நாட்டு விமான சேவை இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாட்டில் ரயில்கள், மெட்ரோ ரயில் சேவை, நகர்புற ரயில் சேவைகள் ஆகிய அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.  ஒரு மாநிலத்தை விட்டு இன்னொரு மாநிலத்துக்கு செல்லக்கூடிய பேருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை மூலம் கொரோனா வைரஸ் பரவக் கூடாது என்பதற்காக இப்படியான அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வரும் பன்னாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. வெளிநாடுகளிலிருந்து எந்த விமானமும் தற்போது இந்தியாவுக்கு வருவதில்லை. கோலாலம்பூர் ,  ஈரான் , இத்தாலி ஏதேனும் வெளிநாடுகளில் இருந்து வரமுடியாமல் இந்தியர்கள் சிக்கி தவித்தால் சிறப்பு அனுமதி பெற்று அவர்களை காப்பாற்றி கொண்டு வரவேண்டும் என்றால் மட்டுமே வெளிநாட்டு விமான சேவைக்கு அனுமதிக்கப்படுகிறது. இதனால் உள்நாட்டு விமான சேவைக்கு எந்த தடையும் இல்லாமல் இருந்தது.

ஒட்டுமொத்த போக்குவரத்து சேவையும் முடங்கியுள்ளதால் பயணிகள் அதிகளவில் இல்லாததால் உள்நாட்டு விமானசேவை எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்நிலையில்  நாளை நள்ளிரவு முதல் 24ம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு உள்நாட்டு விமான சேவைகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 25 ஆம் தேதி முதல் எந்த விதமான உள்நாட்டு விமான சேவைகளும் இருக்காது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் மூன்று மாநிலங்களின் விமான நிலையங்களை முழுவதுமாக மூட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகம், கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 3 மாநிலங்களில் இருந்து இதுபோன்ற கோரிக்கை மத்திய அரசுக்கு வந்ததாக தகவல்கள் தெரியவந்துள்ளன. அதைத் தொடர்ந்து இன்று நடந்த ஆலோசனைகளுக்கு பிறகு உள்நாட்டு விமான சேவைகளையும் முடக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |