Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரொம்ப தொந்தரவா இருக்கு…. அவங்க மேல நடவடிக்கை எடுங்க…. சுற்றி திரியும் கால்நடைகளால் அபாயம்…!!

சாலைகள் அங்கும் இங்கும் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர்-கேரளாவை இணைக்கும் சாலையில் தேவாலா, நாடுகாணி, பந்தலூர், மரப்பாலம், சேரம்பாடி போன்ற முக்கிய பஜார்கள் அமைந்துள்ளது. இந்த சாலை வழியாகத்தான் பந்தலூர் தாலுகா மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்துகொள்ள கூடலுருக்கு சென்று வருகின்றனர். மேலும் அத்தியாவசிய பொருட்களை கேரளாவிற்கு கொண்டு செல்லும் சரக்கு லாரிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் இந்த சாலையில் இயக்கப்படுவதால் எப்போதும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இந்நிலையில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிகின்றன.

இந்த கால்நடைகள் காலை முதல் இரவு வரை சாலையில் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து பஜாரில் கொட்டப்படும் காய்கறி கழிவுகளை சாப்பிடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உண்டாகியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, தேவாலா பஜாரில் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாத சமயத்தில் கால்நடைகள் அங்கும் இங்கும் உலாவருவது போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே மேய்ச்சலுக்காக கால்நடைகளை அவிழ்த்துவிடும் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |