அந்தியூர் கால்நடை சந்தையில் மாடுகள் பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் கால்நடை சந்தை நடைபெற்றுள்ளது. இந்த சந்தைக்கு திருப்பூர், எடப்பாடி, அந்தியூர், மேட்டூர், சத்தியமங்கலம், ரெங்கநாதபுரம், கோவை, பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் மாடுகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வருவது வழக்கம். இந்நிலையில் ஒரு ஜோடி கொங்கு காளை மாடு 70 ஆயிரம் ரூபாய் முதல் 1, 50,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன் பின் ஒரு ஜோடி காங்கேயம் காளை மாடு 75 ஆயிரம் ரூபாய் முதல் 1, 50,000 ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது.
இதனையடுத்து பர்கூர் இன பசுமாடு ஒன்று 10 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையும், சிந்து பசுமாடு ஒன்று 20 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜெர்சி பசு 15 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது. மேலும் எருமை மாடு 30 ஆயிரம் ரூபாய் முதல் 65 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன் பின் கன்றுக்குட்டி 5 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது. சேலம், பொள்ளாச்சி, திருப்பூர் பகுதிகளில் உள்ள வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் இந்த மாடுகளை விலைபேசி பிடித்து சென்றுள்ளனர்.