பாலிவுட் சினிமாவில் வாரிசு நடிகர் மற்றும் நடிகைகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்ற சர்ச்சைகள் சம்ப காலமாகவே அதிகரித்துள்ளது. இந்த சர்ச்சையில் பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூரும் சிக்கியுள்ளார். இதுகுறித்து தற்போது ஜான்வி கபூர் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, பாலிவுட் சினிமாவில்ல் வாரிசு நடிகைகள் மீது வெறுப்பு காட்டுகிறார்கள். தயாரிப்பாளர் கரண் ஜோகரின் தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் வாரிசு நடிகைகளை அவர் அறிமுகப்படுத்துகிறார்.
இந்த நிறுவனம்தான் என்னையும் தடக் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தது. இதுவே தற்போது என்னை கேலி செய்வதற்கு வழி வகுத்து விட்டது. தர்மா புரோடெக்சன்ஸ் நிறுவனம் மீதான வெறுப்பு தான் என் மீதும் தற்போது காட்டப்படுகிறது. இருப்பினும் நான் அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்த படத்தை நினைத்து மிகவும் பெருமைப்படுவதோடு என்னுடைய அதிர்ஷ்டமாகவும் நினைக்கிறேன். மேலும் என் மீது சுமத்தப்படும் விமர்சனங்களால் நான் இன்னல்களுக்கு ஆளாகி பல நாள் வருத்தம் அடைந்துள்ளேன் என்று உருக்கமாக கூறியுள்ளார்.