Categories
உலக செய்திகள்

பண மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்சி.. ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த டொமினிகா நீதிமன்றம்..!!

வங்கியில் பண மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்சியின் ஜாமீன் மனுவை டொமினிகா நீதிமன்றம் நிராகரித்துள்ளது.  

பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி மற்றும் அவரின் உறவினர் மெகுல் சோக்சி இருவரும் 14 ஆயிரம் கோடி ரூபாய், கடனை மும்பையில் இருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளையில் பெற்று விட்டு மோசடி செய்துள்ளனர். எனவே அவர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்ததால் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளனர்.

மெகுல் கோக்சி ஆண்டிகுவாவில் தலைமறைவாக இருப்பதை அறிந்தவுடன், மத்திய அரசு அவரை இந்தியாவிற்கு நாடு கடத்தும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அவர் ஆண்டிகுவா குடியுரிமையை பெற்றதால், அவரை நாடு கடத்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டபோது  திடீரென்று அவர் மாயமானார்.

அதன் பின்பு அவர் ஆன்டிகுவாவிற்கு அருகிலிருக்கும் டொமினிக்காவிற்கு படகில் சென்று கொண்டிருந்தபோது அங்கு காவல்துறையினரிடம் மாட்டியுள்ளார். டொமினிக்கன் அரசிடம், அவர் தேடப்படும் குற்றவாளி, இந்திய குடிமகன். எனவே அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு மத்திய அரசு சார்பில் ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே மெகுல் சோக்சியின் வழக்கறிஞர்கள் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தது,  நேற்று டொமினிகா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது டொமினிகா அரசின் வழக்கறிஞர், இந்தியாவில் பண மோசடி செய்த வழக்கில், இவர் தேடப்பட்டு வருவதால் இந்தியாவிற்கு அவரை நாடு கடத்துமாறு வாதிட்டுள்ளார்.

ஆனால் மெகுல் சோக்சியின் வழக்கறிஞர், இந்திய அரசியலமைப்பின்படி, இந்தியாவை சேந்தவர்கள், பிற நாட்டு குடியுரிமையை பெற்றுவிட்டால், அவர்களின் இந்திய குடிமகன் என்ற நிலை பறிக்கப்படும். எனவே இந்திய குடிமகன் இல்லாத அவரை இந்தியாவிற்கு நேரடியாக நாடு கடத்த முடியாது என்று வாதிட்டுள்ளார்.

இந்நிலையில் டொமினிகாவில், மெகுல் சோக்சி சட்டத்தை மீறி நுழைய முயன்ற வழக்கு  மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதன் தீர்ப்பை பொறுத்து தான், உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு மீண்டும் விசாரணை நடத்தப்படும். இந்நிலையில் மெகுல் சார்பாக டொமினிகா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு, நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. எனவே வழக்கறிஞர் விஜய் அகர்வால், இதனை உச்சநீதிமன்றத்தில் முறையிடப்போவதாக கூறியிருக்கிறார்.

Categories

Tech |