டான் படப்பிடிப்புக்கு இடையே நடிகர் சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களை சந்தித்த வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் , டாக்டர் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதை தொடர்ந்து இவர் அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சூரி, சிவாங்கி, சமுத்திரக்கனி ,முனீஸ்காந்த் ,பாலசரவணன் ,காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
#DON Shoot Spot 🤩🔥🔥 @Siva_Kartikeyan Anna 🔥#Doctor pic.twitter.com/IO354s7XJx
— Harish (@h_a_r_is_) March 6, 2021
இந்தப் படத்தை லைக்கா புரொடக்சன் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்சன் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது . தற்போது டான் படத்தின் படப்பிடிப்பு சேலத்தில் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் படப்பிடிப்புக்கு இடையே நடிகர் சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களை சந்தித்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது .