Categories
சினிமா தமிழ் சினிமா

‘டான்’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்… படக்குழு வெளியிட்ட செம மாஸ் அறிவிப்பு…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘டான்’ படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் , டாக்டர் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதையடுத்து இவர் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார் .  இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார் .

மேலும் எஸ்.ஜே.சூர்யா, சூரி, சிவாங்கி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகர் சமுத்திரக்கனி இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது . ஏற்கனவே சிவகார்த்திகேயன்- சமுத்திரகனி கூட்டணியில் வெளியான நம்மவீட்டுப்பிள்ளை, ரஜினி முருகன் ஆகிய  படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது . தற்போது மூன்றாவது முறையாக இவர்கள் கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது .

Categories

Tech |