நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர், அயலான் ஆகிய படங்கள் தயாராகியுள்ளது . இதில் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் வருகிற ரம்ஜான் திருநாளில் மே 14-ஆம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்தது. தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார்.
Wrapped a stunt sequence for #Don ✨
Happy to have worked along with this fantastic energetic team! Looking forward to the next schedule for another raging stunt♥️@SKProdOffl @LycaProductions @Siva_Kartikeyan @Dir_Cibi @anirudhofficial #SIVAKARTHIKEYAN #VickyStuntMaster pic.twitter.com/klLHLFx6jD— Vicky Stunt Director (@VickyStunt_dir) March 11, 2021
இந்நிலையில் இந்த படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்றை ஸ்டண்ட் இயக்குனர் விக்கி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் ‘சமீபத்தில் டான் படத்தின் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. இந்தப் படத்தின் குழுவினர் எனர்ஜியாக இருப்பதால் இவர்களுடன் பணிபுரிவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் ஒரு அதிரடி ஆக்ஷன் காட்சி உள்ளது’ என பதிவிட்டுள்ளார். இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.