அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தற்போது நான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தால், உக்ரைன் போர் நடந்திருக்காது என்று தெரிவித்திருக்கிறார்.
ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் படைகளும், அதற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், மக்கள், பாதுகாப்பு படையினர் என்று மொத்தமாக 150- க்கும் அதிகமானோர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப், ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்தது தொடர்பில் தெரிவித்திருப்பதாவது, சரியாக நிலையை கையாண்டால், உக்ரைன் நாட்டிற்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பற்றி எனக்கு நன்கு தெரியும். அவர் தற்போது மேற்கொண்ட தாக்குதலை, நான் அதிபராக இருந்திருந்தால் கட்டாயமாக செய்திருக்க மாட்டார். எனினும், தற்போது போர் தொடங்கிவிட்டது.
கச்சா எண்ணெய்க்கான விலையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. புடினுக்கு தேவையானது கிடைத்துவிட்டது. கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பதன் மூலம் அவர் மேலும், பணக்காரராகிறார் என்று தெரிவித்திருக்கிறார்.