அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் மீது நாட்டை உளவு பார்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அமெரிக்க நாட்டினுடைய முன்னாள் அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப், புளோரிடோவில் இருந்த வீட்டிலிருந்து மக்களின் பார்வையில் படாத பல ரகசிய அரசாங்க ஆவணங்கள் மீட்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் நேற்று நீதிமன்ற ஆவணங்கள் வெளியானது. அதன்படி புளோரிடாவில் இருக்கும் ட்ரம்பின் மார்-ஏ-லாகோ என்னும் தோட்டத்திலிருந்து FBI அதிகாரிகள் முக்கியமான சில தகவல்களை கைப்பற்றியிருக்கிறார்கள்.
அதில், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய ஆவணங்களும் இருந்திருக்கிறது. 20 பெட்டிகளில் இருந்த ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் பொதுமன்னிப்பு கடிதங்களை கைப்பற்றியதாக தெரிவித்திருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் பிரான்ஸ் நாட்டின் அதிபர் மேக்ரோன் குறித்த சில ஆவணங்களும் அதில் வைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், ட்ரம்ப் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், FBI அதிகாரிகளால் மீட்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் இதற்கு முன்பே மக்களின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டவை. மேலும், கோரிக்கை வைத்திருந்தால் அவரே ஆவணங்களை நீதித்துறைத்திடம் கொடுத்திருப்பார். நாட்டின் அதிபர் பதவியில் இருந்த தாம் எந்த வித தவறும் செய்துவிடவில்லை. இந்த சோதனை மிகவும் ஒழுக்கமற்றது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.