Categories
மாநில செய்திகள்

முடிந்தது பேரறிவாளனின் பரோல்… மீண்டும் கிடைக்குமா?

பேரறிவாளனின் ஒரு மாதம் பரோல் இன்றுடன் முடிவடைகின்ற நிலையில், நாளை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய ஒரு மாத கால பரோல் இன்றுடன் முடிவடைகிறது.

இதனையடுத்து, நாளை காலை 10 மணிக்கு பேரறிவளானின் வீட்டிலிருந்து காவல் துறையினரின் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இந்நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தனது கணவர் குயில்தாசனின் உடல் நிலையை காரணம் காட்டி பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத கால பரோல் வழங்கக் கோரி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதனால் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுமா அல்லது நாளை சிறையில் அடைக்கப்படுவாரா என்பது இன்று மாலைக்குள் தெரியவரும்.

Categories

Tech |