தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அழகி மரியா ஹீரோயினாக நடிக்க, சத்யராஜ் மற்றும் பிரேம்ஜி போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் வழக்கம்போல் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய வேலையை காண்பித்து விட்டார்.
இந்நிலையில் பிரின்ஸ் திரைப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் கூறியதாவது, படம் முழுக்க வழவழன்னு பேசிட்டு இருக்காங்க. நம்ம வாய்ஸ் மேனன் போல சிவகார்த்திகேயன் வாய்ஸ்ல படம் ஆரம்பிச்சு போயிட்டே இருக்கு. வழக்கமாக சிவா படம் என்றாலே கிராண்டா ரொம்ப பர்ஃபெக்ட்டா இருக்கும். ஆனா இந்த படத்துல அப்படி எதுவுமே இல்லை. எந்த ஒரு லாஜிக்கும் இல்லாம படம் பாக்கறவன முட்டாள் நெனச்சு படம் எடுத்து வச்சிருக்காங்க. வழக்கமா சூப்பரா நடிக்கிற சத்யராஜ் கூட இந்த படத்துல ஒழுங்கா நடிக்கல. ஏன் இப்படி பண்ணாருன்னு தெரியல. 2 மணி நேரம் 11 நிமிஷம் இந்த படம் ஓடுது. இந்த படத்தை தியேட்டர்ல உட்கார்ந்து பார்க்க முடியல என்று கூறியுள்ளார். மேலும் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை பார்த்த சிவா ரசிகர்கள் அவரை கழுவி ஊற்றுகிறார்கள்.