கல்வி கட்டணம் செலுத்த பெற்றோரை தனியார் பள்ளிகள் நிர்பந்திக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் செலுத்த நிர்ப்பந்திக்கக் கூடாது என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பள்ளி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு பிரதான வருமானம் கல்வி கட்டணம் தான். அந்த கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்றால் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்குவதில் சிக்கல்ஏற்பாடு விடும். எனவே அந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை கடந்த முறை நீதிபதி மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது கல்வி கட்டணத்தை வசூலிக்க கூடாது என்று உத்தரவு போடும், அதே நேரத்தில் தான் அந்தப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்குதல் தடை ஏற்படக் கூடாது என்ற உத்தரவைப் பிறப்பிப்பது எப்படி சாத்தியம் ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது தமிழக அரசு வழக்கறிஞர், கல்வி கட்டணத்தை கட்ட சொல்லி பெற்றோர்களை நிர்ப்பந்திக்கக் கூடாது.
கல்வி கட்டணத்தை தாமாக முன்வந்து விருப்பத்தின் அடிப்படையில் செலுத்த எவ்வித தடையுமில்லை. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிக்கு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளோம். அந்த தொகையை பயன்படுத்தி நான்கு மாதம் ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்கலாம் என்று அந்த அரசு விளக்கத்தை தெரிவித்தது. மேலும் நீதிபதிகள் தனியார் பள்ளிகள் கட்டணத்தை தவணை முறையில் கட்டண ஒரு திட்டத்தை வகுக்க அரசுக்கு மனு கொடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.