Categories
சினிமா தமிழ் சினிமா

“ஜேம்ஸ் பாண்ட் படம் மாதிரி பிகினியும் சிக்ஸ் பேக்கும் இருக்குமா? என கேட்காதீங்க….!” நடிகர் கார்த்தி பேச்சு…!!!!!

சர்தார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான கார்த்தி தற்போது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ஹீரோயினாக ரக்ஷி கண்ணா நடித்திருக்கின்றார். மேலும் முக்கிய வேடத்தில் ரெஜிஷா விஜயன், லைலா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மேலும் படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத் திரைப்படமானது தீபாவளியையொட்டி வரும் அக் 21 தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய கார்த்தி, முதல்முறையாக வயதான தோற்றத்தில் நடிப்பதற்கு நிறைய வேலைகள் செய்ய வேண்டி இருந்தது. 40, 50 மற்றும் 60 வயதிற்கு மேல் உடல் ரீதியாக எப்படி மாற வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன். உளவாளி படம் என்பதால் ஜேம்ஸ் பாண்ட் படம் மாதிரி பிகினியும் சிக்ஸ் பேக்கும் இருக்குமா என கேட்காதீர்கள். இது இந்தியன் ஸ்ப்பை திரில்லராக இருக்கும். இத்திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன். வெற்றியடைய வேண்டும் என நினைத்தால் முதலில் அந்த வெற்றிக்கு நீ தகுதியாக இருக்கிறாயா என யோசித்துப் பாருங்கள் என அண்ணன் கூறுவார். அந்த தகுதிக்கேற்ப நாங்கள் உழைத்திருக்கின்றோம் என நம்புவதாக கூறியிருக்கின்றார்.

Categories

Tech |