இத்தாலியில் ஊரடங்கு தளர்த்தபடுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதற்கு அதற்கு உரிய நேரம் இது இல்லை என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இத்தாலியில் வரும் திங்கட்கிழமை முதல் பெரும்பாலான பகுதிகள் ஊரடங்கு தளர்த்தபடுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தாலியில் 16 பிராந்தியங்கள் மிகக் குறைந்த ஆபத்துடைய மஞ்சிற மண்டலத்திலும் பக்லியா, சார்டினியா, சிசிலி மற்றும் அம்ப்ரியா ஆகிய நான்கு பிராந்தியங்கள் ஆரஞ்சு மண்டலத்தில் இருக்கிறது.
இந்நிலையில் இத்தாலியில் எந்த பகுதியம் சிவப்பு மண்டலம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இனி பயணத்திலும், வணிகத்திலும் எந்த கடுமையான கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பகல் நேரத்தில் பார்கள் மற்றும் உணவகங்களை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் நாட்டின் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு விதிகளை தளர்த்துவதற்கு இது உரிய நேரம் இல்லை என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இந்தத் தளர்வுகளால் மீண்டும் அதிக பாதிப்புகளும், இறப்புகளும் ஏற்படும் என்று மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.