ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைவு வாயிலில் வைத்து தூய்மைப்பணியாளர்கள் திடிரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நகராட்சி மற்றும் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், ஒப்பந்த பணியாளர்கள் என்ற முறையை மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு உள்ளாட்சித்துறை பணியாளர் சம்மேளன மாவட்ட செயலாளர் சண்முகராஜன் தலைமை தங்கியுள்ளனர். இதனையடுத்து மாவட்ட பொதுச்செயலாளர் ராஜன் உட்பட பல்வேறு தூய்மை பணியாளர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது.