கொரோனா வைரஸ் பரவல் குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட தகவல் உலக மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
உலகையே மிரட்டு வரும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி 12 லட்சத்துக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. 65 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரை குடித்த கொரோனா வைரஸ் அசுரத்தனமாக வேகத்தில் பரவி வருகின்றது. இந்த தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் முழுமையும் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தி உள்ளன. இதனால் சமூக விலகலை கடைப்பிடித்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தலாம் என்று சொல்ல[படுகின்றது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் நோய்வாய்ப்பட்ட மக்களால் தும்மும்போது அல்லது இருமும்போது அவரின் சுவாசத்தின் மூலமும் பரவக்கூடும் என்று புதுக்குண்டை தூக்கி போட்டார் அமெரிக்காவின் தேசிய சுகாதார தொற்று நோய் ஆய்வகத்தின் தலைவரான அந்தோனி பவுசி. அதே போல சார்ஸ் , கோவ் -2 வைரஸ் தூசுப்படலமாக மாறி 3 மணி நேரம் வரை காற்றில் இருக்கும் என்று நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் அறிக்கை வெளியிட்டது.
இதனால் கொரோனா வைரஸ் காற்றின் மூலமாக பரவும் என்று அச்சம் உலக மக்களிடையே எழுந்த நிலையில் அனைவரின் பீதிக்கும் முற்றுப்புள்ளி வைத்து அசத்தியுள்ளது இந்தியா. நம் நாட்டின் இந்திய மருத்துவ கவுன்சில் இது குறித்து ஆய்வு நடத்தியதில், காற்று மூலமாக கொரோனா வைரஸ் பரவியதாக இதுவரை எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்து உலக மக்களின் அச்ச உணர்வை போக்கியுள்ளது.