Categories
அரசியல்

யாரும் பயப்படாதீங்க…! ”சிப்பாயை போல செயல்பட வேண்டும்” – ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் அதிகமான கொரோனா சோதனை செய்வதால் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக சிறப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

சென்னையில்  தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகம் கொரோனா பாதித்த ராயபுரம் மண்டலத்தில் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் அதிகமாக கொரோனா சோதனை செய்வதால் தான் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு செல்கிறது. இதை கண்டு யாரும் அச்சப்பட தேவையில்லை. இன்னும் ஆறு, ஏழு நாட்களில் கொரோனா பெருமளவில் குறைந்துவிடும். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் பரிசோதனை செய்ய கூடுதலாக மருத்துவர்களை நியமித்துள்ளோம்.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவு பரிசோதனை செய்துள்ளோம். பல்வேறு பகுதிகளில் கொரோனா தாக்கம் குறைவாக உள்ளது. இதனை அடையாளம் கண்டுள்ளோம். ஒவ்வொருவரும் சிப்பாயை போல செயல்பட வேண்டும். 30 சதவீத மக்கள் முக கவசம் அணியாமல் அலட்சியமாக இருந்து வருகிறார்கள். வீட்டிலிருக்கும் முதியவரிடம் நெருங்கி பேசுவதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Categories

Tech |