Categories
உலக செய்திகள்

“வேகமாக பரவும் புது வைரஸ்” பயப்பட வேண்டாம் – சுகாதார துறை செயலாளர்…!!

வேகமாக பரவி வரும் புது வகையான வைரஸ் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்று சுகாதார செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் புதுவகையான வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அது வேகமாக பரவி வருவதாகவும் பிரிட்டன் சுகாதார செயலாளர் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் இது குறித்து அங்குள்ள 60 உள்ளூர் அதிகாரிகள் இந்த புது வகையான வைரஸ் பரவுவதை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உலக சுகாதார அமைப்புக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அறிவியலாளர்களும் இது குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய வைரஸ் கண்டுபிடிப்பு மற்றும் வேகமாக பரவுவது குறித்து வெளியிடப்பட்ட தகவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இது குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று Aberdeen  பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியரான Hugh Penington தெரிவித்துள்ளார்.  நுண்ணுயிரிகளை பொறுத்தவரை இது ஒரு சாதாரண விஷயம்தான். வைரஸ்கள் அவ்வப்போது தன்னுடைய அமைப்பை மாற்றி கொண்டே இருக்கும்.

எனவே இது குறித்து குறித்தும் அச்சம் அடைய தேவையில்லை என்ரூ கூறியுள்ளார். வைரஸின் இந்த திடீர் மாற்றத்திற்கு, நோயை உண்டு பண்ணும் தன்மைக்கும், வேகமாக பரவுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார். புளூ வைரஸ் தான் கொரோனா வைரஸை விட அதிகமாக பரவும் தன்மை கொண்டது. அதனால்தான் ஆண்டுதோறும் விஞ்ஞானிகள் புதிதாக புளு தடுப்பூசியை கண்டுபிடிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |