தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் இல்லை என்பதால் பயப்பட வேண்டாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருகின்றது. இந்நிலையில் கேரளாவில் உருவாகிய பறவைக்காய்ச்சல் இந்தியாவின் வடமாநிலங்களிலும் பரவியுள்ளது. எனவே மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் இதுவரை பறவைக்காய்ச்சல் யில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கேரளா மாநிலம் எல்லையோரம் உள்ள மாவட்டங்களில் ஆட்சியர்கள் தலைமையில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, குமாரி மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு பறவைக்காய்ச்சல் பரவுவது மிகவும் குறைவு என்பதால் வீண் எச்சம் வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.