Categories
இந்திய சினிமா கொரோனா சினிமா

அச்சப்பட வேண்டாம், மருத்துவர்கள் கடவுளின் மறு உருவம் – அமிதாப் வீடியோ பதிவு ..!!

கொரோனா வைரஸை கண்டு நாம் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப் வீடியோ பதிவிட்டுள்ளார்.

பாலிவுட்டின் பிரபல நடிகரான அமிதாப் பச்சன் (77). இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. ஆனால் இவர்கள் லேசான தொற்றுடன் , மும்பையில் இருக்கும் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட்டிருந்தனர். இந்த நிலையில் அமிதாப் தற்போது ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் அவர் இவ்வாறு கூறியுள்ளார், ” கொரோனா குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம். இந்த இக்கட்டான சூழ்நிலையில், வெள்ளை கோட்டில் உள்ள மருத்துவர்கள் கடவுளின் மறுஉருவம்.,

அவர்கள் தங்களின்  உயிர்களை பணயம் வைத்து நம் உயிர்களை காப்பாற்றி வருகிறார்கள் . நானாவதி மருத்துவமனையில் பணியாற்றி கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியை நான் கூறிக்கொள்கிறேன். இந்த கொடிய வைரஸ் தொற்றிலிருந்துநாம் அனைவரும் கண்டிப்பாக மீண்டு வருவோம். இவ்வாறு அவர் கூறி பதிவிட்டுள்ளார் . இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

Categories

Tech |