சாத்தான்குளம் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைப்பதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
வழக்கை சிபிஐ.க்கு மாற்றி பொறுப்பை தட்டிக் கழிக்காதீர்கள் முதல்வரே என கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் மேல் ஐபிசி 302 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து புலனாய்வுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கி சூடு, குட்கா ஊழல் வழக்குகள் கிடப்பில் உள்ளன. சாத்தான்குளம் வழக்கையும் சிபிஐ-க்கு மாற்றினால் மக்கள் மறந்து விடுவார்கள் என்று எண்ண வேண்டாம் என கூறியுள்ளார். நீதியை காக்குமாறு கோரியுள்ள கமல்ஹாசன், காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்தி வரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், சிறைச்சாலையில் இருவர் உயிரிழந்தது குறித்து சிபிஐ- விசாரணைக்கு மாற்ற வேண்டும் என தமிழக அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், மாநில அரசு முடிவெடுக்கும் பட்சத்தில் நீதிமன்றம் அதில் தலையிடாது என கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.