Categories
மாநில செய்திகள்

“சட்டம் தெரியாம இருக்காதீங்க”…. நல்லா படிச்சிட்டு வாங்க…. காவல் அதிகாரிகளுக்கு பொன். மாணிக்கவேல் அட்வைஸ்….!!!!!

சேலத்தில் உள்ள மத்திய சட்டக் கல்லூரியில் 3-ம் ஆண்டு சட்டப் படிப்புக்கான முதலாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் ஐஜியும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியுமான பொன் மாணிக்கவேல் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, மாணவர்கள் அனைவரும் பயத்தை தவிர்ப்பதோடு நல்ல புத்தகங்களை படித்து நேர்மையான நண்பர்களை தேர்வு செய்ய வேண்டும். நீதிதுறைக்கும் காவல்துறைக்கும் இருக்கும் சில இறுக்கமான சூழ்நிலைகளை தவிர்க்க வேண்டும்.

அதன் பிறகு காவல்துறையால் சராசரியாக 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டால், 86 சதவீத வழக்குகள் வழக்கறிஞர்களின் வாத திறமையால் தள்ளுபடி ஆகிறது. சட்டம் படிப்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை வாங்கி கொடுக்க வேண்டும். தற்போதுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு சட்ட நுணுக்கங்கள் தெரியாததால் அவர்களால் வழக்குகளை திறம்பட கையாள முடியவில்லை. எனவே இளம் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் சட்டத்தை நன்றாக படிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் இந்த விழாவில் கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |