Categories
தேசிய செய்திகள்

அலட்சியம் வேண்டாம்… வீடுகளை விட்டு அவசியமின்றி வெளியே வராதீர்கள் – பிரதமர் மோடி வேண்டுகோள்!

வீடுகளை விட்டு அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,363ஆக அதிகரிந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 339ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,036 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். யாரும் அலட்சியத்துடன் இருக்க வேண்டாம். வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர் மோடி, அத்தியாவசிய தேவைக்கு வெளியே வந்தால் தனி மனித இடைவெளி அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பரிசோதிக்க ஜனவரியில் ஒரு ஆய்வகம் மட்டுமே இருந்தது, தற்போது 220க்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன என அவர் தகவல் அளித்துள்ளார். ஏப்ரல் 20க்கு பிறகு அதிகம் பாதிப்பு ஏற்படாத பகுதிகளில் விதி விலக்குகள் அறிவிக்கப்படும். ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராதவர்களை வேலையை விட்டு நீக்கக் கூடாது என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |