ஊரடங்கு நீட்டிப்பு குறித்து உடனே அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு மே 3ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது. இன்னும் மூன்று நாட்களில் ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது நீக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசித்த போது ஊரடங்கு மேலும் ஒரு மாதம் வரை நீடிக்கலாம் என்று பல மாநில முதல்வர்கள் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.
ஆனால் மத்திய அரசு என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறது என்று தெரியவில்லை. ஊரடங்கு நீட்டிப்பு குறித்து எந்த அதிகாரபூர்வ தகவலும் வராத நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின், ஊரடங்கு குறித்த அடுத்த கட்ட அறிவிப்பை மத்திய, மாநில அரசுகள் சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும். ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, நீக்கப்படுமா என்ற குழப்பம், எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மக்கள் மனதில் நிலவுகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு ஒத்துழைக்க வேண்டியது மக்களின் கடமை. 35 நாட்களுக்கு மேலாக வீட்டிலேயே முடங்கியுள்ள மக்கள் மனநிலை, வாழ்வாதாரத்தை கருத்தில் கொள்ள வேண்டும். ஊரடங்கு குறித்த கடைசி நேரத்தில் அதிக புரதச்சத்தை அறிவிக்காமல் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.