Categories
கிரிக்கெட் பல்சுவை விளையாட்டு

சிரிக்கவே மாட்டார் ….. தங்கம் மாதிரி இருப்பார்….. 2011_இல் டபுள் டமாக்கா ….!!

கம்பீர் பிறந்தநாளில் அவரை குறித்த சுவாரசியமான தகவல்களை இந்த செய்தி தொகுப்பு கொடுக்கின்றது.

இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரராக இருந்து ஓய்வு பெற்று டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்து வரும் கவுதம் கம்பீர் இன்று பிறந்தநாளை கொண்டாடுகின்றார். சச்சின் , கங்குலி என்ற  ஒரு சிறந்த வலதுகை ,  இடதுகை தொடக்க ஆட்டக்காரர் என்பது எள்ளளவும் சந்தேகமில்லை. அவர்களுக்கு இணையாக சேவாக் , கம்பீர் ஜோடி இருந்தது என்றால் மிகையல்ல.

 2007 ஆம் ஆண்டு மற்றும் 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையில் உலக கோப்பை வாங்க கம்பீர் ஒரு முக்கிய காரணம். இரண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத சக்தி என்றால் அது கவுதம் காம்பீர் தான்.இவர் சிரிக்கவே மாட்டார் என்று இவரைப் பார்த்த கேள்வி எழுப்பியவர்கள் பலர். ஆனால் சிரிச்சா தங்கம் மாதிரி இருப்பார் என்பது உண்மை . இன்று பிறந்தநாள் கொண்டாடும் கம்பீர் குறித்து முக்கியமான சுவாரஸ்யமான தகவல்கள் குறித்து பார்க்கலாம்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் பிறந்தது 1981ம் வருடம் அக்டோபர் மாதம் 14ஆம் தேதி. இவர் டெல்லியில் உள்ள மாடன் ஸ்கூலில் படித்தார்.

இவர் 2000 ஆம் ஆண்டு முதல் முறையாக பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமியில் இடம் பிடித்தார்.

கம்பீர் பிறந்த சில நாட்களிலேயே தனது தாத்தா பாட்டி எடுத்து சென்றனர். கம்பீர் பிறந்த 18 நாட்கள் கழித்து அவரது தாய் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிக்கொண்டிருந்த போது வழியிலேயே பார்த்த அவரது தாத்தா பாட்டி அவரை மிகவும் பிடித்துப் போகவே தத்தெடுத்துக் கொண்டனர். எனவே கம்பீர் அவர்களுடன் வாழ்ந்து வந்தார்.

தனது 17வது வயதில் டெல்லி அணிக்காக விளையாடிய அவரின் அசத்தல் ஆட்டத்தால் தேசிய கிரிக்கெட் அணியில் தேர்வாளர்களின் பார்வையை கம்பீர் பக்கம் திருப்பியது.

இதன் மூலமாக 2003 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தாகாவில் தனது அறிமுக போட்டியில் விளையாடினார்.

2007_ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை விளையாட்டு தொடரில் இந்திய அணி சார்பில் அதிக ரன் குவித்த வீரர் பெருமை பெருமை சேரும் , இவர் இந்த தொடரில் 227 ரன்கள் குவித்தார். மேலும் அந்த தொடரில் மேத்யூ ஹெய்டன் அடுத்ததாக அதிக ரன் அடித்தவர் என்ற பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பிடித்து இருந்தார்கள்.

2009-ம் ஆண்டு கம்பீர் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் முதல் இடத்தைப் பிடித்திருந்தார் , அதே ஆண்டில் ஐசிசியின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதையும் வென்றார் காம்பீர்.

இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளில் 6 போட்டிகளில் கேப்டனாக இருந்து வழி நடத்தியுள்ளார். அந்த 6 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிராக 2010 ஆம் ஆண்டு இவர் 5 போட்டிகள் கொண்ட தொடரை 5_ந்தும் வெற்றி பெற்றறார். அதே போல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த ஒருநாள் போட்டி ஒன்றிலும் கம்பீர் தலைமையில் இந்திய அணி வெற்றியை சுவைத்தது.

2011 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டி உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய வெல்வதற்கு முதுகெலும்பாய் இருந்தவர் கவுதம் காம்பீர். அவர் 122 பந்துகளில் 95 ரன்கள் குவித்து இந்தியாவிற்கு சிறந்த துவக்கம் கொடுத்து , வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது அவரை கவுதம் கம்பீர் தான் ஆனால் துரதிஷ்டவசமாக அவருக்கு என்று ஆட்டநாயகன் விருது வழங்கப்படவில்லை.

2011 ஆம் ஆண்டு கவுதம் கம்பீருக்கு  டபுள் டமாக்கா என்றுதான் கூறவேண்டும். ஒரு கையில் உலககோப்பை , மறுகையில் தன் மனைவி நடாஷாவுடன் கம்பீர் வெற்றி நாயகனாக வலம் வந்தார்.டெல்லியின் வெர்சஸ் பார்மில் இவரது திருமணம் நடந்தது.

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரராக இருந்த கவுதமிற்கு கிரிக்கெட் தவிர மிகவும் பிடித்தமானவை படிப்பது , குடும்பத்துடன் லாங் டிரைவ் செல்வதாகும். மேலும் பிளே ஸ்டேஷனில் விளையாடுவது , லெப்ட் ரைட்  என்ற தொலைக்காட்சியில் சீரியல் பார்ப்பது கம்பீருக்கு பிடித்தமான பொழுதுபோக்கு.

ஒருமுறை ஐபிஎல் தொடரில் 2.5 மில்லியனுக்கு வாங்கப்பட்டார் கவுதம் கம்பீர். இதுதான் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு வீரர் அதிக தொகைக்கு வாங்கப்பட்டதாகும்.

கொல்கத்தா அணிக்காக இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்து இருக்கின்றார்.

டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமை கவுதம் கம்பீரை சாரும்.சர்வதேச அளவில் இந்த சாதனையை நான்காவது நபராக நிகழ்த்தினார்கள் கம்பீர் , இந்த சாதனையை பிராட்மேன் , காலிஸ் , முகமது யூசப் நிகழ்த்தியுள்ளனர்.

அதேபோல சர் வில்லியம் ரிசர்ச்-க்கு பிறகு தொடர்ந்து 18 டெஸ்ட் போட்டிகளில் 18 அரைசதம் அடித்த இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் வீரர் கம்பீர் தான்.

தொடர்ந்து நான்கு டெஸ்ட் தொடர்களில் 300க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் தன்வசம் வைத்து இருக்கிறார் கவுதம் கம்பீர்.

2008-ஆம் ஆண்டு இந்திய அரசு கவுதம் கம்பீருக்கு அர்ஜுனா விருது வழங்கி கவுரவித்தது.

மனித நேயத்திற்கு கம்பீர் ஒரு சிறந்த உதாரணமாகும்.

தீவிரவாதிகளில் கொலைசெய்யப்பட்ட சத்தீஸ்கர் சிஆர்பிஎஃப் , ஜம்மு காஷ்மீர் காவலாளியின் குழந்தைகளின் கல்வி செலவு மொத்தத்தையும் தானே ஏற்றுக்கொண்டார் காம்பீர்.

ஜிஜி பவுண்டேஷன் என்ற பெயரில் மக்கள் நலவாழ்வு சேவைகளை செய்து வருகிறார் கம்பீர்.

இது ஏழை மக்களுக்கு இலவச உணவு அளிப்பது இதன் முக்கிய சேவையாக செய்து வருகின்றது.

யார் ஒருவரும் பசியுடன் உறங்கக் கூடாது என்பதே குறிக்கோளாக வைத்து இந்த பவுண்டேஷன் இயங்கி வருகிறது.

திருநங்கைகளுக்கு தனது ஆதரவை அளித்துள்ளார்கள் கவுதம் கம்பீர். சோசியல் மீடியா மூலம் தனது கருத்துக்களை பதிவிடுவது மட்டுமின்றி திருநங்கைகள் போலவே உடை உடுத்திக் கொண்டு சென்று அவர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்து இருக்கிறார் கவுதம் கம்பீர்.

Categories

Tech |