செய்தியாளர்களை சந்தித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், ஆவினில் நுகர்வோராக ஒரு கோடி மக்கள் இருக்கிறார்கள். 65 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்திருக்கிறோம், அவர்களுக்கு தெரியும். எந்த அளவுக்கு இருக்கிறது என்று…. எந்த தனியார் நிறுவனமோ, இந்த விலைக்கு தரவில்லை. இந்த அளவுக்கு குறைத்த விலைக்கு தரவில்லை.
ஆவின் மட்டும் தான் கறந்த பால் கறந்தபடி, தாய்ப்பாலுக்கு நிகராக எந்த விதமான தவறுகளும் இல்லாமல் இன்று வரை மாண்புமிகு தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி ஆவின் நிறுவனம் இயங்கிக் கொண்டிருக்கிறது. டெண்டர் விட்ட பழைய ஆட்களை எல்லாம் டெண்டர் முடித்து வெளியே அனுப்பிவிட்டு, புதிதாக வருகின்றவர்களை அழைத்து….
அதனுடைய 55 மைக்ரான் ஆய்வு செய்து அது சரியாக இருக்கிறதா என்பதற்காக, 1300 மீட்டர் வரவேண்டும் ஒரு ரோலில்…. அந்த 1300உம் சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்த பிறகு தான் நாங்கள் பாலித்தினை உள்ளே அனுப்புகிறோம். ஆக இப்போது வரைக்கும் சரியாக இருக்கிறது.
கடந்த ஆட்சியில் நடந்த தவறுகள் நடக்காத வண்ணம் தமிழகம் முதல்வர் எங்களை வழி நடத்தி செல்கிறார். மிக விரைவில் ஆவினில் குடிநீர் விற்பனை வரும். தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து பார்லர்களிலும் குறைந்த விலையில், லாபகரமாக பொதுமக்களின் நலன் கருதி விற்பனைக்கு வரும் என தெரிவித்தார்.