Categories
அரசியல் மாநில செய்திகள்

யாருக்கும் துரோகம் செய்யல…! எல்லாரையும் வாழவைத்த DMK… சொன்ன மாதிரியே நடந்த மூவ்மென்ட் …!! உற்சாக மோடில் தமிழன் பிரசன்னா …!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழன் பிரசன்னா, 1949 செப்டம்பர் 17 அன்று நாம் நின்று கொண்டிருக்கிறோமே.. ஆர்மேனியன் தெரு. இந்த ஆர்மேனியன் தெருவினுடைய கடைசிக்கு போனால் வலப்பக்கத்தில் பவளக்காரன் தெரு. அந்தப் பவளக்காரன் தெருவில் ஏழாம் நம்பரில் திருவொற்றியூர் சண்முகம் வீட்டில் ஒரு நான்கு பேர் கூடினார்கள். அந்த நான்கு பேர் கூடி,  நாம் அரசியலை நாட போகிறோம். அரசியலைத் தொட போகிறோம். நாம் தான் ஆட்சிக்கு வருவோம்,  ஆட்சி பீடத்திற்கு வருவோம் என்று யாரும் சிந்திக்கவில்லை.

அந்த நாலு பேர் கூடினார்கள். அந்த நாலு பேர் பேசி,  செப்டம்பர் 18 ராபின்சன் பூங்காவில்,  ஒரு 27 பேர் அமரக்கூடிய ஒரு மேடையில்,  ஒரு இயக்கம் தொடங்கப்பட்டது. அந்த இயக்கத்தின் பெயர் திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற பேரியக்கம் நண்பர்களே.. மழை இப்படித்தான், இன்றக்காவது தூரல் போடுகிறது. மாறி மாறி ஓடுகிறது. நான் சொன்னேன் காலையில் அமைச்சரிடத்திலேயே..  அண்ணன் கவலைப்படாம போவோம், இந்த நிகழ்ச்சி முடியுற வரை மழை இருக்காது பாருங்கன்னு சொன்னேன்.. அது நடக்கும்.

நாம் யாருக்கும் துரோகம் விளைவித்தவர்கள் அல்ல,  எல்லோரையும் வாழ வைத்தவர்கள்.   அப்படித்தான் நாம் நிகழ்ச்சி நடத்துகிறோம், மழை வராது, எழுதி வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அன்றைக்கு அண்ணா பேசிய போது மழை கொட்டியது,  மழை பொழிந்தது. தலைவர் கலைஞர்,  ஆசைத்தம்பி,  பெத்தாம்பாளையம் பழனிச்சாமி. இன்னும் பல மூத்த தலைவர்கள்,  மதியழகன் போன்ற எல்லா தலைவர்களும் உட்கார்ந்திருந்தார்கள். இப்படி அன்றைக்கு எல்லோருக்கும் பேச வாய்ப்பில்லை. அண்ணா எல்லோரையும் நிறுத்தினார். மழை

பொழிந்து கொண்டிருக்கிறது. இங்கே எப்படி கட்டுக்கடங்காமல் எங்கள் துறைமுகத்தின் பகுதி பெண்கள் கூடியிருக்கிறீர்களோ… அப்படித்தான் அன்றைக்கு ராபின்சன் பூங்காவில் கர்ப்பிணி பெண்களோடு கொட்டுகின்ற மழையில் தன் முந்தானையை தலையில் போட்டுக் கொண்டு இந்த இயக்கம் காக்க, பெண்மக்கள் கூடி நின்றார்கள். அண்ணா பார்த்தார்.  பார்த்தபோது சொன்னார்…  பெண் மக்கள் இப்படி ஆர்வமாக வந்திருக்கிறார்கள். எந்த நம்பிக்கையில் இங்கு வந்திருக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் எல்லோரையும் நிறுத்திவிட்டு அண்ணா பேசினார்,  கொட்டுகிறது மழை.

இந்த மழையும் எனக்கும் எந்த தொடர்பு எப்படி இல்லையோ,  அப்படித்தான் இந்த இயக்கம் காண்கின்ற எனக்கும்,  தந்தை பெரியாருக்குமான உறவில் எந்த விரிசலும் இல்லை. சொல்லிவிட்டு சொன்னார்…  இங்கே நான் ஒரு ஒட்டு மாஞ்செடியை நட போகின்றேன்.  இந்த ஒட்டுமாஞ்செடி வளரும். இந்த கொட்டுகின்ற மலையில்,  இடிக்கிறது மின்னல் இடிக்கிறது. இந்த அரங்கம் அதிருகிறது, மரங்கள் ஆடுகின்றது. மேலே இருக்கின்ற கிளைகள் விழுந்து,  எங்கள் தலைகளில் விழுமோ என்கின்ற அச்சம் இருக்கின்றது.

இடியே எங்கள் தலையில் விழுந்தாலும், இந்த தமிழ் சமூகத்தின் மானம் காக்க, இந்த தமிழ் சமூகத்தை பேணி பாதுகாக்க அண்ணாதுரை ஆகிய என் தலைமையில் இன்றைக்கு நாங்கள் நடபோகின்ற இந்த ஒட்டு மாஞ்செடியின் பெயர் திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற பேரியக்கம் என்று அண்ணா தொடங்கி சொன்னார். இந்த மாஞ்செடியை நட்டு விட்டேன். இந்த மாஞ்செடி வரும். வளரும், வேருவிடும், கிளைவிடும், காய் வரும், கனிவரும், பெரிய பறவைகள் இங்கே வந்து உட்கார்ந்து விட்டு, கூண்டிலே இருந்து,  அதனுடைய இனப்பெருக்கத்தை செய்து கொண்டு போகும்.

ஆனால் இந்த மரம்  பலன் கொடுக்கின்ற போது, நானும்,  தம்பி கருணாநிதியும் இங்கே இருக்கின்ற ஆசை தம்பியோ, மதியழகனோ,  பழனிச்சாமியோ யாருமோ இருக்க மாட்டார்கள். ஆனால் நாங்கள் நடப்போகின்ற இந்த ஒட்டுமாஞ்செடி,  ஐம்பது ஆண்டுகள் கழித்து திராவிடனும், தமிழனும் தன்மானத்தோடு வாழுகின்ற ஒரு மிகப்பெரிய நிழல் கொடுக்கின்ற மாமரமாக இருக்கும் என்று சொன்னார். அந்த நான்கு பேர் இந்த பவளக்கார தெருவிலே கூடியது தான்,  இன்றைக்கு இங்கே உட்கார்ந்து இருக்கின்ற ஒரு லட்சம் பேர். இந்த இனத்தின், இந்த தன்மானத்தை நாம் இன்றைக்கு உண்டு பருகின்றோமே திராவிட தன்மானம் என்கின்ற பழத்தை
அன்றைக்கு அண்ணா நட்டு  வைத்தார் என வரலாறுகளை விவரித்து பேசினார்.

Categories

Tech |