செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ், நீதிமன்றம் உண்மையை சொல்லியாச்சு. அதனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இரண்டு பேரும் சேர்ந்து கட்சியை நடத்த வேண்டும். இது போன்ற குழப்பங்கள் செய்யக்கூடாது என்று விரும்புகிறார்கள். இவர்களும் அவர்களோடு சேர்ந்து செயல்பட விரும்பவில்லை. ஏனென்றால் இவர்கள் தனியாக நடத்தினால் இவர்களுடைய சவுகரியத்திற்கு யாரை வேண்டுமானாலும் கொண்டு போகலாம் ?
யாரை வேண்டுமானாலும், வேட்பாளராக அறிவிக்கலாம், யார் வேண்டுமானாலும் நீக்கலாம் ? யாரை வேண்டுமானாலும் சேர்க்கலாம் ? என்று எடப்பாடி நினைக்கிறார். அவரோடு இருக்கக்கூடிய நபர்கள் கட்சிக்கு மட்டுமல்ல, சொந்த வாழ்க்கைக்கு விசுவாசம் இல்லாத துரோகிகள்.கே பி முனுசாமி போன்றவர்கள், சி.வி சண்முகம் மற்றவர்களெல்லாம்….
அதனால் இவர்களை நம்பி ஏமாந்து எடப்பாடி பழனிச்சாமி ரோட்டில் போய் நிற்கப் போகிறார், உங்களோடு பழகிய நட்புக்காக சொல்கிறேன், நீங்கள் அண்ணா திமுகவில் விசுவாசமாக இருங்கள். அதிமுக உங்களுக்கு வாழ்வு கொடுத்த கட்சி, உங்களை வளர்த்திய கட்சி, அதற்கு துரோகம் செய்ய வேண்டாம் என்று சொல்கிறோம் என தெரிவித்த்தார்.