Categories
அரசியல் மாநில செய்திகள்

5 பைசா கூட வாங்கல..! உண்மைய பேசுன, கட்சியில் நீக்கிட்டாங்க: காயத்ரி ரகுராம் வேதனை

பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி ரகுராம், நான் உண்மையை பேசுனதுக்காக மட்டும் தான் நீக்கியுள்ளார், வேற எதுவுமே இல்லை. உண்மையை பேசி இருந்தேன். என்ன பத்தி ஒரு தனிப்பட்ட தாக்குதல் வரும்போது, பாஜக நிர்வாகி செல்வகுமார் என்பவர் அதற்கு லைக் செய்தார். இது முதல் தடவை இல்ல. இந்த மாதிரி பல தடவை அவருடைய சார்பில் எனக்கு நிறைய ட்ரோல்கள் வந்தது. மூன்றாவது தடவை இந்த மாதிரி வந்துட்டு இருக்குத்து. அதற்கு நேரடியாக நான் பதிலடி கொடுத்தேன்.

அந்த பதிலடி கொடுத்ததற்காக… இது யாராக இருந்தாலும் சரி….  ஒரு சராசரி மனிதனாக இருக்கட்டும்….  இல்ல டி.எம்.கே சார்ந்தவராக இருக்கட்டும்…  இல்ல விசிகவை  சார்ந்தவராகவே இருக்கட்டும்… இல்ல பிஜேபியை சார்ந்தவராக இருக்கட்டும்… தனிப்பட்ட முறையில் என்னை தாக்குனா ? யார் தாக்கினார்களோ,  அவர்களுக்கு நான் திரும்ப பதிலடி கொடுக்க தான் செய்வேன். இது என்னோட ரைட்ஸ். அதை நான் செஞ்சது  தவறு என்று சொல்லி முடக்குவது எனக்கு வருத்தமா இருக்கு. அதுக்காக என்னை சஸ்பெண்ட் பண்றது,  அதுவும் கட்சிக்கு கலங்கும் என்ற ஒரு வார்த்தை சொன்னது,  மன வருத்தத்தையும்,  மன உளைச்சலையும் எனக்கு கொடுத்தது.

இந்த மன உளைச்சல் என்பது சாதாரண விஷயம் அல்ல. இந்த கட்சிக்காக எட்டு வருஷம் உழைப்பு கொடுத்து இருக்கேன்.  என்னோட சினிமா பணிகளாக இருக்கட்டும், தனிப்பட்ட வாழ்க்கையாக இருக்கட்டும், நான் பாஜகவுக்காக…  இந்த தேசத்துக்காக…  5 பைசா கூட வாங்காமல்,  என்னோட சொந்த காசு,  கடன் வாங்கியாவது கூட மத்தவங்களுக்கு உதவி பண்ணிட்டு வந்து இருக்கேன். அதுக்கு நிறைய உதாரணம் இருக்கு,  உண்மையும் இருக்கு. அதுக்கு சாட்சியம் இருக்காங்க என தெரிவித்தார்.

Categories

Tech |