Categories
உலக செய்திகள்

இனி இத வாங்காதீங்க… பிரபல சாம்பார் மசாலாவில் விஷம்…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் MDH  சாம்பார் மசாலாவில் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் சல்மோனல்ல பாக்டீரியா இருப்பதாக  கண்டுபிடிக்கபட்டுள்ளது.

ஐக்கிய அமீரகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் R-PURE என்ற நிறுவனம் MDH என்ற பெயரில் மசாலா பொருட்களை பல நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவுக்கு அந்நிறுவனம் உள்நாட்டு வர்த்தகம் மூலம் சாம்பார் மசாலா சப்ளை செய்து வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள கடைகளில் விற்பனை செய்தது. கடந்த வாரம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்த MDH சாம்பார் மசாலா உணவு மற்றும் மருந்துகளை முறைப்படுத்தும் ஆணையம்  பரிசோதனை செய்தபோது.

Image result for mdh masala

அதில் உணவை விஷமாக மாற்றும் தன்மை கொண்ட சால்மொனல்லா பாக்டீரியா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பாக்டீரியாவால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு காய்ச்சல், வயிற்றுப் போக்கு, வயிற்று வலி, தலைவலி, அலர்ஜி உள்ளிட்ட கடுமையான உடல் பாதிப்புகள் ஏற்படும் நிலையில் ஆய்வு செய்து இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதையடுத்து கடந்த வாரம் மூன்று முறை அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்பட்ட இந்த மசாலாக்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் திரும்ப பெற்றது.

Image result for mdh masala

இந்த மாசாலாவை திரும்பப் பெறும்படி நிறுவனத்துக்கு வலிறுத்தப்பட்டதா?அல்லது நிறுவனம் தானாகத் அந்த முயற்சி எடுத்ததா என்பது தெரியவில்லை. இதே MDH மசாலா இந்தியாயாவிலும் விற்பனை  செய்யப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது. அமெரிக்கா வகைகளைத் தயாரிக்கும் R-PURE நிறுவனம் தான் இந்தியாவுக்கும் சப்ளை செய்கிறாதா என தெரியவில்லை. கடந்த 2011 ஆம் ஆண்டு காலகட்டத்தில் சுமார் 20 முறை MDH சாம்பார் மசாலாவில் பாகிடேரியா இருந்ததை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் முறைப்படுத்தும் ஆணையம் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |