Categories
அரசியல் மாநில செய்திகள்

”பைத்தியக்காரன்” யாரும் அடிச்சுக்காதீங்க…! 8பேரிடம் கேளுங்கள்… எடப்பாடியை காட்டமாக விமர்சித்த புகழேந்தி …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, என்னை விட நீங்கள் மக்களை எளிதாக சந்திக்கிறீர்கள், நீங்கள் போகும் போது 10 பேரை சந்தித்தால் ஒரு 8 பேரிடம் கருத்து கேளுங்கள், அவர்களின்  என்னவென்றால், அடிச்சுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள், கட்சி போச்சு, தலைவர் அம்மா வளர்த்த கட்சி, எனக்கே கஷ்டமாக இருக்கிறது. திமுகவில் இருப்பவர்களே சொல்கிறார்கள், வேறு கட்சியில் இருப்பவர்களை சொல்கிறார்கள். அப்போ பொதுமக்களின் கருத்து என்னவென்றால் ஒற்றுமையாக போங்க.

அதை அவரிடம் சொல்லும் போது, இப்படித்தான் இருக்கிறது என்று. ஒரு கட்சி அடித்துக் கொண்டு வர முடியாது என்பதை உணர்ந்து தான் அந்த தலைவர் அழைக்கிறார். எங்கே வேணாலும் பார்த்துக் கொள்ளுங்கள், எந்த கட்சியானாலும் சரி, அதுதான் நடக்கிறது. இந்த ஆட்சி போனதுக்கு அண்ணன் தான் காரணம் என்கிற ஜெயக்குமார், 10.5 சதவீதத்தை எந்த பைத்தியக்காரன் அந்த நேரத்தில் கொண்டு வருவார்கள் ? யார், யாரை காலி செய்வதற்காக கொண்டு வந்தீர்கள்.

டாக்டர் ராமதாஸ் கேட்பார், அன்புமணி ராமதாஸ் பெறுவார், அது அவர்களது கடமை. யாரை கேட்டு ஆலோசனை இல்லாமல் 10.5 வந்து  அறிவித்து, ஓபிஎஸ் மற்றும் தென்மாவட்ட மக்கள் எதிர்பையும்  சந்தித்து, அவரை காலி செய்வதற்காக இறங்கி நியாயமா?  அவர் பையனை பற்றி பேசுகிறார்கள், இரண்டு பையனும் அரசியல் தான் இருக்கிறார்கள். யார் அரசியலில் இல்ல.  உங்கள் பையன் சுனில் அண்ணா நகரில் ஒருவரோடு சுற்றி கொண்டு இருக்கிறார், அவர் சொல்கிற ஐடியாவில் தானே பழனிச்சாமி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஜெயக்குமார் பையன் எம்.பி-ஆக இருந்தார் அல்லவா, யாருடைய பசங்க அரசியலில் இல்ல. அவருடைய மகன் எம்பியா இருப்பது என்ன தவறு? நான் ஓபிஎஸ் உடைய இன்னொரு பையனை கூட சொன்னேன் நீங்கள் கூட வாங்க அரசியலுக்கு என்று, அதிமுக உறுப்பினர் தானே வெளியே வாங்க என்ன தவறு என்று. ஆகவே ஒற்றுமை வேண்டும் என்பது மக்களுடைய கருத்து, அதன் நிறைவேற்ற வேண்டியது எங்களுடைய பணி, நாங்கள் மக்கள் சேவகாரர்கள் அதை தான் செய்ய வேண்டும்.

Categories

Tech |