Categories
அரசியல் மாநில செய்திகள்

”என்னை அரசியலுக்கு அழைக்காதீங்க” போலீசில் புகார் கொடுப்பேன்…. ஜெ.தீபா அதிரடி

என்னை யாரும் அரசியலுக்கு அழைக்காதீங்க ,  நான் அரசியலில் இருந்து விலகுகின்றேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக_வை சசிகலா கைப்பற்ற முயற்சித்த நிலையில் அதிமுக பல்வேறு அணிகளாக பிரிந்தது. சசிகலா , EPS , டிடிவி தினகரனை உள்ளடக்கி அதிமுகவும் , ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் , ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தலைமையில் ஒரு அணியும் இயங்கி வந்தது. இதை தொடர்ந்து சசிகலா_வுக்கு சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை வழங்கியதையடுத்து TTV தினகரனை அதிமுகவில் இருந்து நீக்கிவிட்டு OPS மற்றும் EPS இணைந்தனர்.

Image result for ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா

அதே போல TTV தினகரனும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று புதிய கட்சியை ஆரம்பித்து அதன் பொதுச்செயலாளராக இருந்து வருகின்றார்.  மேலும் தீபா எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை நடத்தி வந்த நிலையில் தற்போது தனது எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை அதிமுகவுடன் இணைத்து விட்டதாகவும் , அரசியலில் இருந்து விலகுவதாகவும் , தன்னை யாரும் அரசியல் தொடர்பாக அழைக்க வேண்டாம் மீறி அழைத்தால் காவல்துறையிடம் புகார் அளிக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |