அவசரமில்லாத வேலைகளுக்காக வங்கிக்கு வரவேண்டாம் என அனைத்து வங்கி நிறுவனங்களும் வாடிக்கையாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றனர். பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், மார்க்கெட் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. கோவில் திருவிழா நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை நடத்த தடை விதித்துள்ளது.
இந்நிலையில் மக்கள் அதிகம் கூடும் மற்றொரு இடமானது வங்கி. அங்கும் தற்போது சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை முடிந்த அளவிற்கு வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் பாஸ் புக் பிரின்டிங், வங்கி கணக்கு இருப்பு அறிவது உள்ளிட்ட அவசரமில்லா வேலைகளுக்காக தயவுசெய்து வங்கிகளுக்கு வரவேண்டாம் என்றும் வங்கியில் வேலை முடிந்து விட்டால் உடனடியாக கிளம்புங்கள் அதிக நேரம் வங்கி உள்ளேயோ வங்கி அருகிலேயே அமர்ந்து கொண்டு நேரம் செலவிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தக்கப்பட்டுள்ளது.