அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு நியப்பட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் எடப்பாடி கே.பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். இதன் ஒருபகுதியாக தருமபுரி மாவட்டத்திற்கு சென்ற எடப்பாடிக்கு அக்கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அக்கட்சி தொண்டர்களிடம் பேசிய அவர்,
தருமபுரி மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கோட்டை. ஆகவே வேண்டுமென்ற திட்டமிட்டு எங்களுடைய தொண்டர்கள் மீதும், நிர்வாகிகள் மீதும், முன்னாள் அமைச்சர்கள் மீதும் பொய் வழக்கு போட்டு எங்களை முடக்கி விடலாம் என்று ஒருபோதும் எண்ணி விடாதீர்கள்.
நீங்கள் எப்போதெல்லாம் எங்கள் மீது வழக்கு போடுகிறீர்களோ, அப்போதெல்லாம் வீறு கொண்டு எழுந்து, அதை முறையடிப்போம். அந்த திராணியும், தெம்பும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எங்களுக்கு வழங்கிவிட்டு சென்று இருக்கிறார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை கொல்ல புறத்தின் வழியாக, கோழைத்தனமாக எங்கள் மீது வழக்கு போட்டு மறைமுகமாக எங்களை ஒடுக்க நினைத்தால், நிச்சயமாக உங்களுடைய கட்சி வீழ்ந்து விடும்.
நாட்டு மக்கள் உங்களுக்கு ஆட்சியை அதிகாரத்தை எதற்கு தந்திருக்கிறார்கள்? நல்லாட்சி செய்ய வேண்டும் என்று….. சந்ததி சாக்கிலே, நீங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டு, தர்மபுரி மாவட்டத்தை போல தமிழ்நாடு முழுவதும் வெற்றி பெறுவது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றி என பேசினார்.