தேனி மாவட்டத்தில் தந்தை மகன் இணைந்து திமுக நிர்வாகியை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரை அம்பேத்கர் நகரில் லிங்கேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். திமுக நிர்வாகியான இவர் நேற்று முன்தினம் பெரியகுளத்தில் உள்ள எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் தாமரைக்குளம் பகுதியில் உள்ள தாசில்தார் நகரை சேந்த காளிதாஸ்(52) மற்றும் அவரது மகன் தினேஷ்குமார்(30) ஆகிய இருவரும் எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை பார்த்துக்கொண்டிருந்த திமுக நிர்வாகி லிங்கேஸ்வரன் அவர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காளிதாஸ் மற்றும் அவரது மகன் இணைத்து அங்கிருந்த கட்டையால் திமுக நிர்வாகியை தாக்கியுள்ளனர். இதனையடுத்து லிங்கேஸ்வரன் பெரியகுளம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் காளிதாஸ் மற்றும் தினேஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.