ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வீட்டில் இருந்துகொண்டே ஆதார் அட்டை மூலம் சேமிப்பு கணக்கு தொடங்க முடியும் என்று வங்கி தலைமை அறிவித்துள்ளது.
நாட்டில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் முக்கியமானதாக கருதப்படும் எஸ்.பி.ஐ வங்கியின் டிஜிட்டல் தளம் தான் யோனோ பாங்கிங். இந்த தளம் மூலமாக வீட்டில் இருந்து கொண்டு புதிய சேமிப்பு கணக்கை தொடங்க முடியும். இதற்கு ஆதார் மற்றும் பான் கார்டு கட்டாயம் வேண்டும் என வங்கி தலைமை தெரிவித்துள்ளது. வங்கியில் நாம் கணக்கு தொடங்கினால் என்னென்ன ? சேவைகள் உண்டோ அதற்கு இணையாக யோனோ செயலி மூலம் தொடங்கும் சேமிப்பு கணக்கிற்கும் கொடுக்கப்படும் என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி தலைவர் ராஜ்னிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
யோனோ செயலி மூலம் வங்கியில் சேமிப்புக் கணக்குத் தொடங்கும் பயனர்களுக்கு ரூபே அட்டை வங்கிகளின் மூலமாக வழங்கப்படும். மேலும் பல விவரங்களை வங்கி கணக்கில் சேர்க்க விரும்பும் வாடிக்கையாளர்கள் அருகிலிருக்கும் வங்கிக் கிளைக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம் என்றும் வங்கி தலைமை அறிவித்துள்ளது.வீட்டிலிருந்தே சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என்ற எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு பலரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.