தியேட்டருக்கு படம் பார்க்க வரவேண்டாம் என நயன்தாராவிடம் தியேட்டர் உரிமையாளர் கூறிவிட்டாராம்.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் தற்போது கனெக்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை நயன்- விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தை அஸ்வின் சரவணன் திகில் திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் இப்படம் சில இடங்களில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தாலும் பலயிடங்களில் வரவேற்று கிடைக்கவில்லை என தகவல் வெளியாகி இருக்கின்றது.
அண்மையில், நயன்தாரா படம் பார்க்க முடிவு செய்து மதுரையில் இருக்கும் தியேட்டருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். புறப்பட்டுவிருந்த நேரத்தில் தியேட்டரின் உரிமையாளர் தொடர்பு கொண்டு நயன்தாராவை வரவேண்டாம் என கூறிவிட்டாராம். ஏனென்றால் படத்தை பார்க்க தியேட்டருக்கு ஒருவர் கூட வரவில்லையாம். இதனால் நயன்தாராவை வர வேண்டாம் என தெரிவித்து விட்டாராம். இதன் காரணமாக நயன்தாரா ஏமாற்றம் அடைந்திருக்கின்றார்.