கொரோனா ஊரடங்கை நீடித்து உத்தரவிட பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு 7 வேண்டுகோள் விடுத்தார்.
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறது. இந்தியாவிலும்கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வந்ததால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவின் கடைசி நாளான இன்று காலை 10 மணிக்கு கொரோனா தொடர்பாக 4வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி மக்களிடையே பேசினார். இதில் ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீடித்து, நாட்டு மக்களுக்கு அவர் 7 வேண்டுகோள் விடுத்தார்.
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி விடுத்துள்ள வேண்டுகோள்கள்!
1.வீட்டில் உள்ள முதியவர்களுக்கு கூடுதல் கவனிப்பு தேவை.
2.சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
3. நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
4″ஆரோக்கிய சேது” மொபைல் செயலியை மக்கள் பயன்படுத்த வேண்டும்
5 ஏழை, எளிய, ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்
6. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களை மரியாதையுடன் நடத்தவும்
7. மக்கள் வெளியில் வரும் போது கட்டாயம் முகக் கவசம் அணியுங்கள்