Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவை அழிக்காதீங்க எடப்பாடி…. ஓபிஎஸ் தான் ஒருங்கிணைப்பாளர் – அதிரடி காட்டும் கோவை செல்வராஜ்..!!

அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்து இருந்தார். அந்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் இன்று  தீர்ப்பளித்து இருந்தார்கள்.   இந்த தீர்ப்பினை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்ய இருக்கிறார்கள். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ்,

நமக்குள் இருக்கின்ற பிரச்சனைகளை பேசுவதற்கு தான் நீதிமன்றம் சென்றிருக்கிறோம். நீதிமன்றத்தினுடைய கருத்தை விமர்சிக்க தயார் இல்லை. இன்றைய நிலையில் ஒருங்கிணைப்பாளராக அண்ணன் ஓபிஎஸ் இருந்து கொண்டிருக்கின்றார்கள். நான் கேட்பதெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே… நாலரை ஆண்டு காலம் முதலமைச்சராக  இருப்பதற்கு 11 சட்டமன்ற உறுப்பினர்களை சேர்ந்த ஓபிஎஸ்,

எந்த நிபந்தனையும் இல்லாமல் உங்களை ஆதரித்ததன் காரணமாக, மக்களுக்கு அடையாளம் தெரியாத நீங்கள் நாலரை ஆண்டுகால முதலமைச்சராக இருந்தீர்கள். உங்களை முதல்வராகி அழகு பார்த்தார் ஓபிஎஸ், உங்களை முதலமைச்சர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தாரே, உங்களை எதிர்க்கட்சித் தலைவராக அவர் தேர்ந்தெடுத்தார் அதற்கும் நீங்கள் கொடுக்கின்ற நிலைப்பாடு என்ன ?

கட்சியை அழிக்க பார்க்காதீர்கள். உங்களுக்கு வாழ்வு கொடுத்த கட்சி அண்ணா திமுக. உங்களை  இவ்வளவு பெரிய உச்சத்திற்கு செல்வதற்கு வாழ்வு கொடுத்தது அண்ணா திமுக. அந்த அண்ணா திமுகவையும், தொண்டர்களையும் அழிப்பதற்கான நடவடிக்கை எடுப்பதை கைவிட்டுவிட்டு விடுங்கள். அண்ணா திமுக 50 ஆண்டு கால வரலாற்றில் நீங்கள் கட்சியை வழிநடத்துவதற்கு எந்த அடிப்படையிலும் தகுதி இல்லாதவர்.

2017-இல் புரட்சித்தலைவர் அம்மா தான் நிரந்தர பொதுச் செயலாளர் என்று சொல்லி 28 ஆண்டுகள் அம்மா இருந்த பதவியில் யாரும் இருக்கக்கூடாது என்று ஒரு முடிவெடுத்து,  அன்றைக்கு ஒருங்கிணைப்பாளராக அண்ணன் ஓ பன்னீர்செல்வம் அவர்களையும்,  எடப்பாடி பழனிச்சாமி அவர்களை இணை ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு கட்சி வழிநடத்துவதற்கான ஓபிஎஸ் வர்களும்,  ஆட்சியை நடத்துவதற்கு எடப்பாடி பழனிசாமியும் என முடிவெடுக்கப்பட்டு  ஒன்றாக இணைந்து 6 ஆண்டு காலம் சிறப்பாக செயல்பட்டுவிட்டு,

இப்பொழுது திடீரென்று இந்தமூன்று மாத காலத்தில் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறீர்கள். ஒற்றுமையாக, ஒருமனதாக, ஒட்டுமொத்த தொண்டர்கள் ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளறை முறையே வாக்களித்து தேர்ந்தெடுத்த பிறகு,  மூன்று மாத காலத்துக்குள் இவ்வளவு குழப்பங்களை ஏற்படுத்தி, இன்னைக்கு அண்ணா திமுகவை அழிக்க பார்க்கிறீர்களே இது நியாயம்தானா?

அம்மா அவர்களிடம் இருந்த பொதுச்செயலாளர் பதவியே யாரிடமும் உட்கார மாட்டோம் என்று சொல்லிவிட்டு, சசிகலா அவர்களையே தற்காலிக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி, இன்றைக்கு அம்மா இருந்த பொதுச் செயலாளர் பதவியில் நான் அமருவேன் என்று அடம் பிடிக்கிறீரே,  நீங்கள் அம்மாவுக்கே துரோகம் செய்கிறீர்களே. எந்த விதத்தில் மனசாட்சிப்படி செயல்படுகிறீர்கள். இன்றைக்கு பொதுக்குழு உறுப்பினர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் ஓபிஎஸ் இடம் தான் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |