Categories
சினிமா தமிழ் சினிமா

“40 நிமிஷ பேட்டியில் 20 நிமிஷத்தை சர்ச்சையா மாத்திராதீங்க”…. தயாரிப்பாளர் தில் ராஜு திடீர் வேண்டுகோள்….!?!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது.

அதன்பிறகு வாரிசு திரைப்படத்தை விட துணிவு அதிக திரைப்படங்களில் தமிழகத்தில் ரிலீசாக போவதாக தகவல் வெளியானதால் தயாரிப்பாளர் தில் ராஜு நேர்காணல் ஒன்றில் தமிழகத்தை பொறுத்தவரை அஜித்தை விட விஜய் தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். அப்படி இருக்கும் போது துணிவு படத்திற்கு கூடுதல் தியேட்டர் ஒதுக்காமல் வாரிசு படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கியுள்ளனர். இது வியாபாரம். ‌ இது தொடர்பாக நான் சென்னைக்கு சென்று உதயநிதியை சந்தித்து பேசப்போகிறேன் என்று ஆவேசமாக கூறியிருந்தார்.

தில் ராஜுவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக மாறியதோடு தொலைக்காட்சிகளில் விவாத பொருளாகவும் பேசப்பட்டது. இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தில் ராஜு தான் முன்பு பேசிய கருத்து தொடர்பாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது, மீடியா முன்பு பேசுவதற்கே பயமாக இருக்கிறது. நான் 45 நிமிஷம் நேர்காணல் கொடுத்தேன். 20 நிமிட வீடியோவை வைத்து சர்ச்சையை உருவாக்காதீர்கள்.

நான் யாரையும் தாழ்த்தியோ, உயர்த்தியோ பேசவில்லை. நான் எல்லா திரைப்படங்களையும் ஆதரிக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் முன்பு விஜய் தான் தமிழகத்தில் நம்பர் ஒன் என்று தில் ராஜு கூறிய நிலையில், தற்போது நான் எல்லா நல்ல திரைப்படங்களையும் ஆதரிப்பேன் என்று கூறியதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

Categories

Tech |