Categories
சினிமா தமிழ் சினிமா

”எதும் வேண்டாம், சும்மா இருங்க” – அஜித் போட்ட உத்தரவு….!

நடிகர் அஜித் யாரும் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களை வேண்டியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் மே ஒன்றாம் தேதி நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள். திரையரங்கில் சிறப்பு காட்சிகள் ஒளிபரப்புவது மட்டுமின்றி கேக் வெட்டி ஆடல் பாடல் என தமிழ்கம் முழுவதும் வெகு உற்சாகமாக திருவிழா போல கொண்டாடப்படும். அதே போல ஏழை மக்களுக்கு அன்னதானம், நலத்திட்டம் உதவி என்று சொல்ல முடியாத அளவிற்கு ரசிகர்கள் அள்ளிக்கொடுத்து மகிழ்வார்கள்.

நடிகர் அஜித் மற்றும் நடிகை போல் அல்லாமல் மாறுபட்டவர். தனக்கு யாரும் ரசிகர் மன்றம் அமைக்க கூடாது என்று அறிவித்தவர். அஜித் அப்படி சொல்லியும் ரசிகர்கள் அஜித் மீது அதீத நேசம் வைத்துள்ள நிலையில், மே மாதம்1ம் தேதி என்னுடைய பிறந்த நாளை  யாரும் கொண்டாட வேண்டம் என்று தெரிவித்துள்ளார். கொரோனாவின் தாக்கத்தால் நடிகர் அஜித் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |