Categories
அரசியல்

அம்மா உணவகங்களை வைத்து அதிமுக அரசியல் செய்ய வேண்டாம்: மு.க.ஸ்டாலின் சாடல்!

தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் அரசே இலவசமாக உணவு வழங்க வேண்டும் என அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என விமர்சனம் செய்துள்ளார்.

மேலும், சுங்க கட்டணத்தை உயர்த்தி இருப்பது மனிதநேயமற்ற செயல் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ” தொடர் ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும் இழந்து நிற்கும் ஏழை எளிய மக்களும், அமைப்பு சாரா தொழிலாளர்களும் தங்களின் ஒரு வேளை உணவிற்கு கூட நாள்தோறும் போராடி அல்லாடி கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசி வாங்கும் ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். சுங்கக்கட்டண வசூலை நிறுத்துமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணத்தை வழங்கிட வேண்டிய மிக முக்கியமான கடமையும் பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் அம்மா உணவகங்களில் மலிவு விலையில் உணவு வழங்குவதும், அந்த உணவகங்களை ஆளுங்கட்சியினருக்கு மட்டும் குத்தகைக்கு விட்டதை போல தாரைவார்ப்பதும் நிச்சயமாக ஏற்புடையது அல்ல என்று அவர் கூறியுள்ளார்.

அரசு மானியத்தில் நடத்தப்படும் அம்மா உணவகங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுகவினர் கையில் ஒப்படைத்திருப்பது மோசமான அரசியல் என்று அவர் கண்டித்துள்ளார். அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாமல் தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களுக்கு வருவோர் அனைவருக்கும் அரசே இலவச உணவு வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |