கடலூரில் பேசிய முதல்வர், இப்பொழுதுதான் வெள்ள சேதங்களுக்கான கணக்கெடுப்பை தொடங்கியிருக்கின்றோம். இன்றைக்கு காலையில் தானே இந்த புயல் அடித்து ஓய்ந்து இருக்கிறது.இதற்கு பிறகுதான் ஒவ்வொரு மாவட்டத்தில் கணக்கீட்டு, எவ்வளவு சேதம் என்பதை அவர்களிடத்தில் பெற்று அதற்கு தகுந்த இழப்பீடு அரசு வழங்கும்.
பேரிடர் மூலமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். அதோடு அவர்கள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நிவாரணம் வாங்குவார்கள். கடலூரை பேரிடர் மாவட்டம் என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக பேசிய தமிழக முதல்வர்,
இது 3, 4 வருடத்திற்கு ஒருமுறை இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்படுகிறது. இந்த நிவர் புயலும் அப்படி தான் ஏற்பட்டுள்ளது. இன்றைக்கு இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கடுமையாக பாதிக்கும் என்று சொன்னார்கள். ஆனால் நிவர் புயல் நீத்துப் போய்விட்டது. ஆகவே பேரிடராக அறிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைய வில்லை.