சமயலறையில் செய்யக்கூடாத 10 செயல்கள்
ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
மோர்க்குழம்பு சூடாக இருக்கும் போது மூடக்கூடாது.
கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக சேர்த்து வதக்கக்கூடாது.
பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.