Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK சொன்னதை செய்யல…! ஆனால் பாஜக அப்படி இல்ல… மோடி சொல்லுறதையெல்லாம் செய்யுறாரு… பெருமை பேசிய மத்திய அமைச்சர் …!!

செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பொதுமக்களினுடைய கோரிக்கை தேர்தல் வாக்குறுதிகள். தேர்தல் வாக்குறுதிகள் என்பது ஒரு நம்பிக்கை, தேர்தல் வாக்குறுதி என்பது ஒரு பிரமாண பத்திரம், தேர்தல் வாக்குறுதி என்பது நாம் இந்த நாட்டிற்கு என்ன சொல்ல வருகிறோமோ, அதை செய்வதுதான் தமிழர்களுடைய மரபு, தமிழர்களுடைய பண்பாடு, நாம் இந்த தேசத்திற்கு என்ன சொல்லுகிறோமோ, அதை நிறைவேற்றி கொண்டு இருக்கின்றோம்.

நம்முடைய பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்கள் என்ன என்ன சொன்னாரோ, அது அத்தனையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.ஆனால் தமிழகத்தில் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் குடும்ப சகோதரிகளுக்கு கொடுக்கப்படும் என முதலமைச்சர் சொன்னார். ஆனா இன்று அதைப்பற்றி வாயை திறக்கிறது இல்லை. எந்த இடத்திலையும் பேசுவதில்லை. நகை கடன் சொன்னாங்க, அதும் இன்னும் முடியல.

கல்விக்கடன் தள்ளுபடின்னு சொன்னாங்க, அது இன்னும் முடியல. பெட்ரோல் – டீசல் விலையை குறைப்போம் சொன்னார்கள். மத்திய அரசாங்கம் குறைத்த பிறகு கூட இவர்கள் குறைக்கவில்லை. அதைவிட சாராயத்தை நாங்கள் படிப்படியாக குறைப்போம் என்று சொன்னார்கள், வாக்குறுதி கொடுத்தார்கள். அதைப் பற்றியும் இன்று வாய் திறப்பதில்லை. என்ன வாக்குறுதி கொடுத்தார்களோ, அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசாங்கம் முன்வரவில்லை என விமர்சித்தார்.

Categories

Tech |