பப்ஜி, டிக் டாக் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று கோவா முதல்வர் ப்ரமோத் சாவந்த் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இன்றைய சமூகத்தில் பொழுது போக்க்காக ஆன்லைன் விளையாட்டுகளும், சமூக வலைத்தளங்களும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரிக்க முடியாத ஒன்றாக உள்ளது. குறிப்பாக தற்போது டிக் டாக்கிலும், பப்ஜி விளையாட்டுகளிலும் மூழ்கி கிடக்கின்றனர். இதில் பப்ஜி விளையாட்டை தடை செய்வதற்கு பல நாடுகள் யோசித்து வருகின்றன. இந்தியாவில் குஜராத் அரசு ஏற்கனவே இதற்கு தடை விதித்துள்ளது. மேலும் ஈரான், நேபாளம் நாடுகள் பப்ஜியை தடை விதிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பப்ஜி மற்றும் டிக் டாக் செயலிகள் குறித்து கோவாஅரசு பெற்றோர்களுக்கு சுற்றைக்கையை அனுப்பியுள்ளது. அதில் பப்ஜி மீதான ஆர்வத்தை குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து, கோவா முதல்வர் ப்ரமோத் சாவந்த், பப்ஜி, டிக் டாக் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என பள்ளி இயக்குனரகம் மூலம் பெற்றோர்களுக்கு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளோம். இந்த இரண்டு செயலிகளினால் மாணவர்கள் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டு இந்த சுற்றறிக்கையை அனுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.