ஜப்பானில் நடைபெறவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சுமார் 10,000 த்திற்கும் அதிகமானோர் போட்டியாளர்களாக பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மைதானத்தில் வைத்து மதுவை விற்பனை செய்யவதற்கும், குடிப்பதற்கும் போட்டியின் அமைப்பாளர்கள் தடை விதிப்பதற்கு முடிவு செய்துள்ளார்கள்.
ஜப்பான் நாட்டில் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை சுமார் 33 விளையாட்டுகளை உள்ளடக்கிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளில் சுமார் 205 நாடுகளை உடைய 10,000 த்திற்கும் மேலான வீரர்கள் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவி வருவதால் இந்த ஒலிம்பிக் போட்டிக்கு எதிராக ஜப்பான் மக்கள் பலவித கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டி நடைபெறவிருக்கும் மைதானத்தில் வைத்து, மதுவை குடிப்பதற்கு விற்பனை செய்வதற்கும் தடை விதிப்பதாக ஒலிம்பிக் போட்டியினுடைய அமைப்பாளர்கள் முடிவு செய்துள்ளார்கள்.