Categories
Uncategorized

ஹிந்தியை தினிக்காதீங்க…! தெரியும்ல ஜல்லிக்கட்டு போராட்டம் … மத்திய அரசை எச்சரித்த கௌதமன் ..!!

ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய இயக்குனர் கௌதமன், ஜல்லிக்கட்டு விளையாட கூடாது என்பது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு.  இந்திய ஒன்றிய அரசு கைவிரித்து இனி ஜல்லிக்கட்டு விளையாட்டு நடக்காது என்று கொக்கரித்தது, அதெல்லாம் வரலாறு. கடைசியில் எங்க போராட்டத்திற்கு அடிபணிந்து தலைகுனிச்சி இந்த சட்டத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீங்கள் நிறைவேற்றலாம் என்று வேறு வழி இல்லாமல் நீங்கள் அடிபணிந்தீரகள்.

இந்த போராட்டம் முடியாது, சட்டம் ஏற்றினாலும் தமிழர்கள் இதை நம்ப மாட்டார்கள் என்று கடற்கரையை அடித்து, முடித்து, முள்ளிவாய்க்காலை போல ஓரமாக ஒதுங்கி நின்று,  அப்பொழுதும் சீறி  கொண்டிருந்த எங்களை அழைத்து, நாங்கள் சட்டம் இயற்றுகிறோம். இதை பார்த்துட்டு உலகத்துக்கு அறிவீர்கள் என்று சொல்லி, அழைத்து நாங்கள் பார்த்தோம்.

நீதியரசர் பரந்தாமன் ஐயா மூலமாக இது சட்டம் என்று உறுதி செய்துவிட்டு,  கோட்டையினுடைய வாசலில் பத்திரிக்கையாளர்களிடம் நாங்கள் சொன்ன வார்த்தை ”இது சட்டம்” தான் என்று நாங்கள் நம்புகிறோம், 99 சதவீதம்…  ஒருவேளை மீண்டும் நாங்கள் ஏமாற்றப்பட்டால்,  இதைவிட பல நூறு மடங்கு பல்லாயிரக்கணக்கான மடங்கு போராட்டமும், புரட்சியும் இந்த மண்ணில் வெடிக்கும்.

இந்திய ஒன்றியத்திற்கு நாங்கள் ஒரே ஒரு செய்தியை மட்டும் சொல்லிக் கொள்கிறோம். இந்த புரட்சி உங்களுக்கு ஒரு பாடத்தை கொடுத்திருக்கும். இனிமேல் எங்களிடம் வாலாட்டினால் அது நாங்கள் வளர்க்கும் மாடாக மட்டும் தான் இருக்கணும். வேறு எவன் வாலாட்டாலும்,  இழுத்து வச்சு ஓட்ட  நறுக்குவோம் என சொன்ன,  அந்த வார்த்தையை மீண்டும் சொல்றோம் என மத்திய அரசை எச்சரித்தார்.

Categories

Tech |